படித்தது பிடித்தது

படித்தது

அதென்னமோ தெரியலை.. நகரப்பேருந்துகளில் நடக்கும் பாலியல் வன்முறைகள் நமக்கு கலாச்சார பண்பாடு விஷயங்களாக தெரிவதில்லை. இரண்டு பேர் முத்தம் கொடுத்தால் தான் தெரிகிறது.

அந்தப் பெண்ணை அந்த ஆண் இடித்துக்கொண்டு நின்றிருந்தால் அந்த ஆள் இதே போல் அடித்திருப்பார்? Unlikely!

**************************************************

படித்ததில் பிடித்தது - 1

கணேஷ் வெங்கிட்டு

படித்ததில் பிடித்தது - 2

அறுந்த பட்டம்

4 Responses to “படித்தது பிடித்தது”

  1. Keerthivasan Says:

    பெருசுகள் பலரும், கலாச்சாரக் காவலர்களாக தம்மை அஸ்யூம் செய்து கொள்வது வேடிக்கை.

    மாரோடு மார் செர்த்து உதட்டோடு உதடு வைத்து ஓடும் ரயிலில் முத்தம் கொடுப்பது “பள்ளி மாணவர்கள்” என்பதுதான் விஷயம். இதில் நமக்கு “டேக் அவே” எதுவும் இல்லை. இதில் முத்தம் கொடுப்பதும் சரி அல்ல. ஓங்கி அறைவதும் சரி அல்ல. அவசரமாக பப்ளிக்கில் முத்தம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதோ தெரியவில்லை.. ஆனால், அவசரமாக மலஜலம் கழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அதை அங்கேயே அப்படியே கழித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இதுவும். Disposing your emotions in public.. when performed, though unnecessary, you leave the fragrance for everyone. Unfortunately the public noses are always open.

    முன்பின் தெரியாத ஒரு பள்ளி மாணவனை சென்று பல பேர் முன்னால் அறைவதையும் கலாச்சாரச் சீரழிவு என்றும் கொள்ள முடியும், என்பதை அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

    நியூஸ் பேப்பர்கள், ஒரு செய்தியை சென்சேஷனலைஸ் செய்வதர்காக, தலைப்புகள் வெளியிடுவது போல்தான் இதுவும். “வேன் மோதி ஒருவர் பலி” என்ற செய்தி வெளியிடாமல், “வேன் மோதி பள்ளி மாணவர் பரிதாப மரணம்” என்ற செய்தி வெளியிடுவதில் உள்ள வித்தியாசம்தான்.

  2. prabukarthik Says:

    கலாச்சாரம் என்பது என்ன…எந்த எந்த கால கட்டத்தில் என்ன என்ன கலாச்சாரம் எப்படி எப்படி மாறி வந்திருக்கு.. இதெல்லாம் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள்…

    நாம் பல்வேறு விஷயங்களில் இதுதான் சரி இதுவரைக்கும் சரி இதுக்கு மேல தப்பு என்று நிர்ணயம் செய்கிறோம்/செய்யபப்டுகிறோம் என்பது நிதர்சனம். அந்த மதிப்பீடுகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதும் உண்மை…

    >>இதில் முத்தம் கொடுப்பதும் சரி அல்ல. ஓங்கி அறைவதும் சரி அல்ல

    அந்த மாணவன் செய்ததை விட அந்த ஆள் செய்தது தான் எனக்கு பெரிய தவறாக தோன்றுகிறது.

  3. Keerthivasan Says:

    எனக்குத் தெரிந்த வரையில், கலாச்சாரம் என்று ஒரு டாகுமென்டட் ப்ரொஸிஜர் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது குறித்த வரலாற்றுப் பதிவுகள் தாண்டி, வேறெதுவும் இல்லை.

    நாம் இருப்பது கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சி :P

    எல்லாம் பிள்ளை வளர்ப்பிலும், நண்பர்கள் சகவாசத்திலும் தான் இருக்கிறது. அம்மா அப்பா போதிப்பது, பின்பற்றுவது அல்லது பின்பற்ற மறுப்பது.. இவைதான் நமது கலாச்சாரக் கல்வி. அடுத்த கட்டத்தில், நண்பர்கள் பின்பற்றும் கலாச்சாரங்களின் கலவையாகத்தான் நாம் உருவெடுக்கிறோம்.

    நாம் நமது கலாச்சார்த்திலிருந்து சுலபமாக கழட்டிவிடும் சில பழக்க வழக்கங்கள், அடுத்த தலைமுறைக்கு எட்டுவது இல்லை.

    பை தி வே, வெல்கம் டு டமில். கீப் போஸ்டிங் மோர் :)

  4. prabukarthik Says:

    keerthi
    :D

Leave a Reply