விஜயகாந்துடன் ஒரு பேட்டி (நம்ம கற்பனை தான்)
Monday, October 6th, 2008கேள்வி: உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா உங்களோட முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?
பதில்: இங்கே காட்டாட்சி நடக்கிறது. தேவை இல்லாமல் என்னோட கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. எல்லாத்துக்கும் கலைஞர் தான் காரணம்.
கேள்வி: ஆமா அது புரியுது. அதான் நீங்க ஆட்சிக்கு வந்துடறீங்க வெச்சுப்போம்… ஆட்சிக்கு வந்தா உங்களோட முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?
பதில்: மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க… கேள்வி கேப்பாங்க ஒரு நாள்…. எல்லாரையும் சுட்டுக் கொல்லனும்.
கேள்வி: யாரை?
பதில்: நான் சொல்லாத விஷயத்தை எழுதறீங்க.. உங்க மேல வழக்கு போடுவேன்..
கேள்வி: ( …என்னால முடில….. ) சேது சமுத்திர திட்டம் பத்தி உங்க கருத்து என்ன?
பதில்: கருணாநிதி யோட கருத்து என்னவோ அதோட எதிர் கருத்துத் தான் என்னோட கருத்து.
கேள்வி: (ஆகா அபாரம் புல்லரிக்குது… ) நாடே உங்களை தாங்க ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கு.. பின்றீங்க!
பதில்: எல்லாம் கருணாநிதி பண்ற சதி.
ஆண்டவா……எல்லாம் நேரக் கொடுமை…. இதுக்கு தாத்தா, அம்மாவே தேவலாம் போல!……